யாழில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் : மூவர் கைது

Sri Lanka Police Jaffna Shooting Crime
By Theepan Feb 07, 2024 04:54 AM GMT
Report

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளையிலிருந்து இன்று (07.2.2024) காலை சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் புத்தூர் பகுதியில் வைத்து பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டது.

வாகனம் மறிக்கப்பட்ட போது பொலிஸாரை உதாசீனம் செய்த சாரதி வேகமாக சென்று புத்தூர் பிரதான வீதி ஊடாக சிறுப்பிட்டி, ஆவரங்கால் உள்ளிட்ட பல பாதைகளின் ஊடாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக வேகமாக தப்பிச் சென்றுள்ளார்.

சனத் நிஷாந்தவின் வெற்றிடம்: சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

சனத் நிஷாந்தவின் வெற்றிடம்: சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

துப்பாக்கி பிரயோகம் 

வாகனத்தை பின்தொடர்ந்து துரத்தி வந்த பொலிஸார் பாடசாலை மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்த புத்தூர் பிரதான வீதியை அடுத்து மக்கள் நடமாட்டம் குறைந்த வீரவாணி எனும் பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குறித்த டிப்பர் ரக வாகனத்தை தடம்புரளச் செய்துள்ளனர்.


துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான டிப்பர் ரக வாகனத்தின் டீசல் மற்றும் டயர் மீது துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்ததில் சாரதி உட்பட இருவர் வாகனத்துடன் சேர்ந்து தடம் புரண்டனர்.

இவர்களை கடமையிலிருந்த காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் கைதுசெய்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வெடி விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

வெடி விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் 

குறித்த டிப்பர் ரக வாகனம் பொலிஸார் துரத்தி சென்ற போது இடைவழியே ஏற்றி வந்த மணலை பறித்தவாறு சென்றதுடன் மீதமிருந்த மணல் வாகனம் தடம் புரண்ட இடத்திலேயே கொட்டிக் கிடந்தது.

யாழில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் : மூவர் கைது | Shooting In Jaffna Area Three Arrested

தடம் புரண்ட வாகனத்தை கனரக வாகனத்தின் உதவியுடன் தூக்கிய பொலிஸார் வீதியில் இருந்த மணலையும் அப்புறப்படுத்தினர். இதன்போது பளைப்பகுதியைச் சேர்ந்த குறித்த டிப்பர் ரக வாகனத்தின் உரிமையாளர் எனக் கருதப்படும் இளைஞர் ஒருவரையும் அவ்விடத்தில் வைத்து காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

பாடசாலை மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த குறித்த பகுதியில் டிப்பர் ரக வாகனம் சட்டவிரோத மணலுடன் வேகமாக பயணம் செய்வதாக காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினை அடுத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் கைதான மூவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் : மூவர் கைது | Shooting In Jaffna Area Three Arrested

யாழில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் : மூவர் கைது | Shooting In Jaffna Area Three Arrested

இலங்கையில் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்

இலங்கையில் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US