இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மாலைத்தீவின் வெளியுறவு அமைச்சர்
மாலைத்தீவு (Maldives) வெளிவிவகார அமைச்சர் மூசா ஸமீர் (Moosa Zameer) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஜூன் 03 முதல் 06 வரை குறித்த விஜயத்தினை மூசா ஸமீர் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardene) ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இருதரப்பு கலந்துரையாடல்கள்
அத்துடன், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக்குழுவினர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் (Ali Sabry) உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர்.
மாலைத்தீவின் தற்போதைய அரசாங்கம், சீனாவுக்கு சார்பாக செயற்பட்டு வருகின்ற நிலையில், இந்தியாவின் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வது குறைந்துள்ளதோடு இது இலங்கைக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
மாலைத்தீவுக்கு செல்லவேண்டிய இந்தியர்கள், இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |