பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் - சில நாட்களில் அம்பலமாகவுள்ள பல உண்மைகள்
எதிர்வரும் நாட்களில் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக ஆரூடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது வெற்றியை உறுதி செய்ய சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு காய்நகர்தல்களில் ஈடுபட்டு வருகின்றார்.
பலமான கட்சிகளை உடைத்து தனக்கான ஆதரவை பெற்றுக்கொள்ளவது அவரின் தந்திரங்களில் ஒன்றாக உள்ளது.
ரணிலின் ராஜதந்திரம்
இந்நிலையில் சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியை உடைத்து பலரை தன்வசம் இழுக்கும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாக மிகவும் நம்பகமான உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது. இதன் பின்னர் கட்சித்தாவல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பலமாகவுள்ள ரகசியங்கள்
இதன்போது விசேட செய்தியாளர் மாநாட்டை கூட்டி நாட்டு மக்களுக்கு பல உண்மைகளை முன்வைக்க உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரொஹந்திர தெரிவித்துள்ளார்.

தனது Toronto சொகுசு வீட்டை விற்கும் சர்ச்சைக்குரிய கனேடிய எழுத்தாளர்: அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
