நந்தி சமரில் வெற்றிவாகை சூடிய அலையோசை விளையாட்டுக் கழகம்: கௌரவிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள்
தொடர்ந்து பல போட்டிகளில் உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டு கழகம் தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்து வருகிறது.
வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் "நந்தி சமர்" மற்றும் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் "முல்லையின் மகுடம்" ஆகிய போட்டிகள் குறிப்பிடத்தக்கவை.
நந்தி சமர்
வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டு கழகத்தால் உதைபந்தாட்ட அணிகளுக்கிடையே வருடம் தோறும் நடத்தப்படுகிறது நந்தி சமர்.
இந்த போட்டி உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் சிந்தனையில் தோன்றியது. கழகத்தின் பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளில் ஒன்று என இதனை குறிப்பிட்டார் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தி.ஜெயபாபு குறிப்பிட்டார்.
இந்த வருட நந்தி சமரில் செம்மலை உதயசூரியன் அணியை எதிர்த்தாடிய உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டுக்கழம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முல்லையின் மகுடம்
முல்லை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த வருடம் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான போட்டியிலும் உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
இரணைப்பாலை விளையாட்டு மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கழகங்களுக்கு இடையில் தொடர்ச்சியான விளையாட்டுச் செயற்பாட்டை பேணுவதற்கும் போட்டியிட்டு வெற்றியீட்டும் மனநிலையை வளர்த்தெடுப்பதற்காகவும் கழகங்களுக்கிடையே இவ்வாறு தொடர்ந்து போட்டிகளை நடத்துவதாகவும் அத்தகைய செயற்பாட்டின் ஒரு அங்கமே முல்லையின் மகுடம் என உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருடன் உரையாடும் போது அவர் குறிப்பிட்டார்.
கழகங்களால் நடத்தப்படும் போட்டிகளுக்கு மேலதிகமாக சம்மேளனமும் தன்னுடைய நிதிப் பங்களிப்புடன் போட்டிகளை முன்னெடுப்பதாகவும், கழகங்களால் நடத்தப்படும் போட்டிகளுக்கு அந்த அந்த கழகங்களே தங்கள் நிதியினை செலவிடுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிறந்த உதைபந்தாட்ட வீரராகவும், சிறந்த கிராமசேவகராகவும் கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌரவிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள்
விளையாட்டில் பங்கெடுத்து சிறப்பாக விளையாடிய வீரர்களையும் அதற்கு அர்ப்பணித்தவர்களையும் கெளரவிக்கும் முகமாக கடந்த 2023.09.10 அன்று மாலை ஏழு மணியளவில் உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டு வாழ்த்தப்பட்டனர். விருந்துபசாரமும் நடைபெற்றது. சிறப்பாக வழங்கப்பட கெளரவிப்பால் வீரர்களிடையே மகிழ்ச்சியை அவதானிக்க முடிந்ததாக கழகத்தின் தலைவர் க.பரமேஸ்வன் குறிப்பிட்டார்.
கௌரவிப்பு நிகழ்வில் உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கௌரவிப்பு நிகழ்வின் போது,
1. விளையாடிய அணி வீரர்கள்
2. கழகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்
3. பயிற்றுவிப்பாளர்
4. உதயசூரியன் விளையாட்டுக்கழகம், வட்டுவாகல்
5. மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம்
6. பாடசாலைக்கிடையில் இடம்பெற்ற மாகாண மட்டப் போட்டியில் வெற்றி பெற்று தேசியத்திற்கு தெரிவாகிய வீரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
விளையாட்டு வீரர்களின் உறவினர்களும், நலன் விரும்பிகளும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர் என்பது விசேடமாக குறிப்பிட வேண்டியதாகும்.
தாங்கிய கௌரவிப்பாளர்
தொடர் சமர்களில் வெற்றியீட்டியமையால் அகமகிழ்ந்து அவர்களை வாழ்த்தி வாழ்த்து மடல்கள் வழங்கி விருந்துபசாரத்தையும் அலையோசை விளையாட்டு கழகத்தினர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்வுக்கு கழகத்தின் முன்னாள் பொருளாளரும், தொழில் முயற்சியாளருமான ம.ஐங்கரன் (மயூரன்) பூரண நிதிப் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
ஊரின் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு உதவியாக இருப்பது தனக்கு பெரு மகிழ்வை தருவதாக ம.ஐங்கரன் குறிப்பிட்டிருந்தார்.