கொழும்பின் பல பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்
பயணிகளின் பாதுகாப்பிற்காக கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவைப்பட்டால் ஏனைய தொடருந்து நிலையங்களுக்கும் இராணுவத்தினர் அனுப்பப்படுவார்கள் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட தொடருந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக தொடருந்து நிலையங்களில் பல்வேறு சிக்கல் நிலைகள் ஏற்பட்டன.
தொடருந்து நிலையங்களில் முறுகல்
ஹொரபே தொடருந்து நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தொடருந்து செலுத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
தொடருந்து தாமதமாக வருவதால் தொடருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினரை களமிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.