களமுனையிலிருந்து விடுதலை புலிகளின் தலைவர் வெளியேறவில்லை! முன்னாள் போராளி தகவல் (VIDEO)
இறுதிக்கட்ட போரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் களமுனையிலிருந்து வெளியேறவில்லை என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட போராட்டத்தின் இறுதி நாட்களில் நந்திக்கடல் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் களமுனையிலிருந்து வெளியேறவில்லை எனவும், தலைவரின் இருப்பு தொடர்பில் சிலர் போலியான தகவல்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகா தொடர்பில் தற்போது பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை எனவும், யுத்த காலத்தில் வெளியிடப்பட்ட துவாரகாவின் புகைப்படம் அவரது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
துவாரகாவுடன் கல்வி பயின்ற வைத்திய மாணவியொருவரின் புகைப்படமே வெளியிடப்பட்டதாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர், அவரின் குடும்பங்கள் பற்றிய பின்னணி தெரியாதவர்கள் அவர்கள் தொடர்பில் தேவையற்ற சுயவிமர்சனத்தை வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
