உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு பொதிகள் மற்றும் தேநீர் என்பவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கை
அத்துடன் சந்தையில், உணவு பொருட்களின் விலைகளை தன்னிச்சையாக தீர்மானிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களுக்கு இல்லை.
எனவே அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள இந்த விலை அதிகரிப்பு தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.''என கூறியுள்ளார்.
விலை அதிகரிப்பு
இதன்படி, ஒரு சாதாரண தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே, உணவு பொருட்களின் விலைகளை உயர்த்த நேரிட்டதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri