சாந்தனின் அடக்கத்தின் இறுதி நிமிடம் வரை நடந்த வியப்பான சம்பவங்கள்
மனிதனின் உடல் இறப்பிற்கு பின்னர் முழுவதுமாக மண்ணிற்கே சொந்தம் எனவே தான் பூதவுடலை இறுதியில் முழுவதுமாக மண்ணால் நிரப்புகின்றன.
ஆனால் சாந்தனின் இறுதி தருணங்களில் வழமைக்கு மாறாக அவருடைய பூதவுடல் முழுவதுமாக விபூதியால் நிரப்பப்பட்டிருந்தது.
தெய்வீக உணர்வு
இந்நிலையில் சாந்தனின் பூதவுடலை பார்க்கும் போது ஒரு தெய்வீக உணர்வையே ஏற்படுத்தியதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.
மேலும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவரின் உடல் அடக்கம் செய்வதை போன்று சாந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாகவும் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு பூதவுடலை அடக்கம் செய்யும் போது அதை முழுமையாக விபூதியால் நிரப்பியது, சாந்தன் குடும்பத்தாரின் கோரிக்கையாகவோ அல்லது மரபாகவோ இருந்திருக்கலாம்.
ஆனால் தமிழ் மக்களுக்காக சாந்தன் சிறையில் வாடும் போதும், அவர் நாட்டுக்கு திரும்புவார் என்ற காத்திருப்பில் இறுதியாக உயிரற்ற உடலாக அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்படும்போதும் அவர் தெய்வமாகவே பார்க்கப்பட்டார்.
''தெய்வம் வீட்டிற்கு வருகிறது வழிவிடுங்கள்'' என்றே அவரது பூதவுடல் வீட்டிற்குள் கொண்டுசெல்லப்பட்டது.
இறுதி சடங்கு
இதேபோன்று இறுதி தருணத்திலும் வழமைக்கு மாறாக சாந்தனின் உடல் விபூதியால் முழுவதும் நிரப்பப்பட்டு ஒரு தெய்வீக உணர்வோடு சாந்தன் மண்ணுக்குள் சென்றுவிட்டார்.
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்த சாந்தனின் இறுதி சடங்கு நேற்று இடம்பெற்றதுடன் இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.