சஜித்திடம் இருந்து விலகியமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய சரத்பொன்சேகா
எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது நாட்டை பொறுப்பேற்க தவறியதன் காரணமாகவே சஜித்பிரேமதாசவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்திருந்ததாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான சரத்பொன்சேகா நேற்று (17) பங்கேற்றிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளர்
நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச தப்பிச்சென்றபோது நாட்டை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அவர் குறித்த பொறுப்பில் இருந்து விலகிச்சென்றதாகவும் சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாம் எந்தவொரு கட்சி சார்பாகவும் செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாகவே தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |