கோவிட் மாத்திரைகளை பயன்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
கோவிட் பெருந்தொற்றுக்கு தீர்வாக மாத்திரைகளை பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் முதனிலை மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Merck & Co Inc (MRK.N) நிறுவனம் அண்மையில் கோவிட் தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிப்பதற்கு ஓர் மருந்து மாத்திரையை அறிமுகம் செய்திருந்தது.
இந்த மாத்திரைகள் அமெரிக்காவில் அவசர தேவைக்காக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவிட்டுக்கு எதிரான பயன்படுத்தப்படும் முதல் மாத்திரை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத்திரை பயன்பாடு குறித்த நிபுணத்துவ ஆலோசைனை வழங்குமாறு தேசிய ஔடதங்கள் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபையிடம், ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன(Channa Jayasumana) அதிகாரபூர்வமான கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்த மாத்திரையானது வைத்தியசாலை அனுமதி மற்றும் மரணங்களை குறைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மருந்துப் பொருளை ஏற்கனவே சில நாடுகள் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, போன்ற நாடுகளில் இந்த மாத்திரை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை