கிளிநொச்சியில் மழையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள்
புதிய இணைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 1913 குடும்பங்களைச் சேர்ந்த 6064 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் நண்பகல் 12.30மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கடந்த 13ம் திகதி தொடக்கம் இன்றுவரையான காலப்பகுதியில் குறித்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
இதன்படி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 521 குடும்பங்களைச் சேர்ந்த 1698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 1390 குடும்பங்களைச் சேர்ந்த 4359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் 05 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
செய்தி - யது
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 445 குடும்பங்களை சேர்ந்த 1452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாள் பிரிவில், 1216 குடும்பங்களை சேர்ந்த 3752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலைகளின் அட்டகாசம்
இதேவேளை கிளிநொச்சி - கரியாலை நாகபடுவான் குளத்திலிருந்து அதிக நீர் வெளியேறி வருவதுடன் இது தொடர்பில் மக்கள் அவதானமான இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெரியகுளம், கண்டாவளை, நாகேந்திரபுரம், முரசுமோட்டை, ஜயங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமது வாழ்விடங்களை விட்டு இடைக்கால தங்குமிட முகாம்களுக்கு பயணிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் முதலைகளின் அட்டகாசமும் அதிகரித்து கால்நடைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)