சவேந்திர சில்வா ஊடான இந்தியாவின் இரகசிய நகர்வு (Video)
இந்தியாவின் காய்நகர்த்தலை எதிர்கொள்வதற்கான நியமனமாக தான் இலங்கை இராணுவப் படைகளின் பிரதானியாக கஜபா ரெஜிமென்டின் (Gajaba Regiment ) மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸின் நியமனத்தை தான் பார்ப்பதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சவேந்திர சில்வாவை பொறுத்தவரையில் அவர் ஏற்கனவே அமெரிக்காவால் தடை செய்யப்பட்டவர். ஆனால் இந்த நிலையில் இந்தியா மிகப்பெரும் வரவேற்பை கொடுத்திருந்தது கடந்த வாரம்.
இராணுவ கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார். அமெரிக்காவால் தடை செய்யப்பட்டவருக்கு இந்தியா செங்கம்பளம் விரித்திருக்கிறது.
ரணிலை பொறுத்தவரையில் அவரை பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ கொண்டு வர எதிராக நின்றது இந்தியா. மகிந்த தரப்பு ஒருவரை கொண்டு வர தான் இந்தியா முயன்றது முடியவில்லை.
அடுத்த தடவை இந்தியா ஒரு காய்நகர்த்தலை சவேந்திர சில்வா மூலமாக மேற்கொள்ளும் என்றால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான நியமனமாக தான் இலங்கை இராணுவப் படைகளின் பிரதானியாக கஜபா ரெஜிமென்டின் (Gajaba Regiment) மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸின் நியமனத்தை தான் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |