யாழில் தொடர் மழையால் பெரும் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நான்கு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் இன்று (18.12.2023) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடு பகுதியளவில் சேதம்
அத்துடன் மழை அனர்த்தத்தினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. உடுவில் தெற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/205 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த 06 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/ 261, ஜே/276, ஜே/285, ஆகிய கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஜே/261 கிராம சேவகர் பிரிவில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 38.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதன் தாக்கம் உணரப்பட்டாலும் கோப்பாய், உடுவில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுகளில் இதனுடைய தாக்கம் கூடுதலாக உணரப்பட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்: ஹமாஸ் அழியும் வரை போர் நிறுத்தம் இல்லை - செய்திகளின் தொகுப்பு
இதில் குறிப்பாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 அங்கத்தினர்களும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அங்கத்தினர்களும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 அங்கத்தினர்களும் என மொத்தமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 21 அங்கத்தினர்கள் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அன்னை முன்பள்ளி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சமைத்த உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
