இந்தியா - நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 70 பேர் பலி - பலர் மாயம்
இந்தியா மற்றும் நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் புயல் காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை இந்தியாவில் 56 பேரும் நேபாளத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
அதே போன்று, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களில் பெய்த அசாதாரண கனமழை காரணமாக 56 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் காயமடைந்துள்ளதுடன் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
கங்கை, நர்மதா உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
49 மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு
நேபாளத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் 77 மாவட்டங்களில் 49 மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நேபாளத்தின் “ஹிம்லுங் ஹிமால்” மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 உள்ளூர் தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளும் சேத மதிப்பீடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் வசூலைக் குவிக்குமா போராட்டம் திரைப்படம்..! கிளிநொச்சி சிறப்புத் திரையிடலில் கிடைத்த வரவேற்பு