சிறைச்சாலை அதிகாரி மீது 05 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
மாத்தறை - வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி நேற்று (05.08.2023) மாலை தனது கடமையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அதிகாரி வீடு நோக்கி பேருந்தில் பயணித்த போது அதில் ஏறிய 05 பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கியுள்ளது.
மேலதிக விசாரணை
தாக்குதலினால் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி நேற்று முன்தினம் (04.08.2023) மாத்தறை சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் பெற்று காலி சிறைச்சாலைக்கு கடமைக்காக நேற்றைய தினமே (05.08.2023) சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |