யாழ். குப்பிளானில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயம்!
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(9) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் குப்பிளான் சந்தியில் மோதல் இடம்பெற்றது.
ஐவர் படுகாயம்
இந்நிலையில் ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கர வண்டி சாரதியுமென ஐவர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து,காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த குழுவினர் மது போதையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது
இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


