சிறீதரனின் பதவியை பறிக்கும் சுமந்திரன் - விரைவில் கருணாவுக்கு நேர்ந்த கதி தமிழரசுகட்சிக்கும்..
இலங்கைத் தமிழரசு கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்றுமுன்தினம்(24) மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 8.30 மணி வரை இடம்பெற்றது.
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் நிலையில் அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலகுமாறு கட்சி அறிவித்த போதிலும் தான் அந்த பேரவையிலிருந்து விலகப் போவதில்லை என, இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசியல் குழுக் கூட்டத்தில் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், நேற்றையதினம்(25)இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் பணிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தால், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவரிடமிருந்து மீளப் பெற கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஆகவே கட்சியின் எந்த உயர் குழு அவருக்கு அந்தப் பதவியை வழங்கியதோ, அந்தக் குழுவின் ஆலோசனையையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லையென்றால் அந்தப் பதவியை அவரிடமிருந்து எடுப்பது எனத் தீர்மானித்தோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பதவிக்கு அடுத்ததாக யாரை நியப்பிப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..