இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! முகக்கவசம் அணியுங்கள்..
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கதுருவெல, சிலாபம், அகரகம, வந்துரகல, திகன, மடம்பகம, ஹங்கம, அக்கரைப்பற்று, கலவான, முள்ளியவளை,பன்னங்கண்டி மற்றும் உப்புவெளி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது.
காற்றிலுள்ள மாசு அளவு நீண்ட நேரம் சுவாசிப்பதற்கு ஆபத்தான அளவை எட்டியுள்ளதாக காற்றுத் தரக் குறியீட்டு (AQI) முறைமையின் நேரடி தரவுகள் தெரிவிக்கின்றன.
அறிவுறுத்தல்
இது சிறுவர், முதியோர், மற்றும் சுவாச அல்லது இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனால் குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசத்தை அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam