கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவாத்து கொடுக்க ஆறுகட்சிகள் கூட்டு திட்டம்!
தமிழ் மக்களின் பூர்வீகமான கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான சதி திட்டமே இந்த ஆறுகட்சிகள் கூட்டு என ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணா தெரிவிதத்தார்.
நேற்றையதினம்(12.8.2026) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் துறைநீலாவனை வரையும் உள்ள பல சாய்ந்தமருது வீரமுனை, பொத்துவில், உட்பட பல கிராமங்களில் உள்ள தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு கட்டிடங்களுக்கு தீவைத்து விரட்டியடிக்கப்பட்டு ஆலயங்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல் மற்றும் மீன்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீது அடாவடி
அவ்வாறே ஓட்டுமாவடியில் காளிகோவிலை உடைத்து அதில் மீன்சந்தை கட்டியதாகவும் அதற்கு நீதவானை கூட தனது அதிகாரத்தை பயன்படுத்து இடமாற்றம் செய்துள்ளதாக நா.உறுப்பினர் எ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இவ்வாறு தமிழர்கள் மீது ஊர்காவல்படை என்ற போர்வையில் தமிழர்கள் மீது கட்டவிழ்துவிடப்பட்டு தமிழர்களை படுகொலை செய்துள்ளனர்.

இந்த தமிழர்கள் மீது இடம்பெற்ற இந்த அடாவடிக்கு எதிராக அன்றில் இருந்து இன்று வரை தமிழர்களின் பிரதி நிதிகள், தலைவர்கள் என தெரிவித்து வருபவர்கள் எவரும் குரல் கொடுக்காது மௌனிகளாக இருந்து வருகின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரசுகட்சி 11 ஆசனங்களை பெற்று கொண்டு முஸ்லீம் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களுக்கு முதலமைச்சு பதவியை தாரைவாத்து கொடுத்தது தமிழரசு கட்சி அதேபோல கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கே இந்த 6 கட்சி கூட்டு .
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதேச செயலகமான கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தின் கணக்காளரை கூட வழங்க மறுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் நலனில் அல்லது உரிமைக்காக குரல்கொடுப்பார்களா மக்களே சிந்தியுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.