வடக்கில் பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்கள்! கண்டுகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பல மாதங்களாக கடற்றொழில் இன்மையால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வருமானம் இன்மையால் தான் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் மோசமான காலநிலையையும் கருத்தில் கொள்ளாது ஆழ் கடலிற்கு கடற்றொழிலுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது.
நான்கு நாட்களுக்கு முன்னர் கடற்றொழிலிற்கு சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடுவதற்காக கடற்படை, விமானப்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு உட்பட அனைவருக்கும் அறிவித்தும் அவர்கள் உரிய அக்கறை காட்டாமையாலேயே கடற்றொழிலாளர்களை மீட்க முடியவில்லை.
மோசமான காலநிலை
சட்டவிரோத கடற்றொழில்களை கடற்றொழில் மாற்றும் நீரியல் வளத்துறை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை தாண்டும் இந்திய மீன்பிடி படகுகளாலும் வடக்கு கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பல மாதங்களாக கடற்றொழிலாளர்கள் வருமானம் இன்றி அவதிப்படுகின்றனர்.இந்த நிலையில் தான் மோசமான காலநிலையிலும் கடற்றொழிலாளர்கள் ஆழ்கடலிற்க்கு சூடை மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை எவரும் கண்டு கொள்வதில்லை.எவ்வளவோ பிரச்சினைகள் பேசப்பட வேண்டி இருந்தும் அர்ச்சுனா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த காணி பிரச்சினைக்கு துப்பாக்கியை காட்டி பயமுறுத்தும் வேலைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு