கடல் கொந்தளிப்பு..! விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்காக திணைக்களம் விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல்
கடற்பரப்பு கொந்தளிப்பு
இன்று (02) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (03) முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் என்றும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கடல் பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் கடற்சார் சமூகத்தினரும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், அறிவுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam