நாட்டின் பல பகுதிகளில் வயல் நிலங்களுக்கு தீ வைப்பதால் பேராபத்து
நாட்டின் பல பகுதிகளில் அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வயல் நிலங்களில் எஞ்சியிருக்கும் வைக்கோலுக்குத் தீ வைக்கும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றது.
இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அழிந்து மண் வளம் முற்றாகச் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சூழலியலாளர்களும் விவசாய நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், புகையின் தாக்கம் மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக காடோரப் பகுதிகளில் உள்ள யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் சூழல் உருவாகி, மனித-யானை மோதல்களும் தீவிரமடைந்து வருகின்றன.
பேராபத்து
அறுவடைக்குப் பின் வைக்கோலை எரிப்பது தற்காலிகத் தீர்வாகத் தோன்றினாலும் நீண்டகால அடிப்படையில் அது விவசாய நிலத்தையே தரிசாக்கி விடும்.

இதற்கு தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான மாற்று வழிகளை உடனடியாக அமல்படுத்துவது அவசியமாகும்.' என சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri