இந்தோனேசிய பயணிகள் படகில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் மதுரா தீவு கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டின் தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படை மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்து
எனினும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்துக்கான சரியான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவராத நிலையில், இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam