வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை - எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்றைய தினம் (02.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
துல்லியமாக அடையாளம்
மேலும் தெரிவிக்கையில், இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கமராக்கள் மூலம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு படம் பிடிக்கப்படுவார்கள்.
வழக்கமான கமராக்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வீதி விதிமீறல்கள் உடனடியாகப் படம்பிடிக்கப்பட்டு சான்றுகளுடன் சேமிக்கப்படுவதால், தவறிழைக்கும் சாரதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.
இத்திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 9 பிரதான சந்திப்புகள் மற்றும் வீதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் அதிகளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடவடிக்கை
இதேவேளை வீதி விபத்துக்களைக் கட்டுபடுத்தும் நோக்கில், வாகனங்களின் வேகத்தை கண்டறிவதற்காக புதிதாக 50 வேகமானி கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் போக்குவரத்துப் பொலிஸாரால் 45 வேகமானி கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 கருவிகள் சேர்க்கப்படுகின்றன.
45 இத்தகைய கருவிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த கருவிகளில் ஒன்றின் விலை சுமார் 33 இலட்சம் ரூபாவாகும் என்றார்.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri