பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் தீப்பரவல்
யாழ் - வடமராட்சி, பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கும் வலிக்கண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று ஏற்பட்ட தீப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பருத்தித்துறை பிரதேச சபையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தீப்பரவலானது இன்று(19.06.2026) பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
வீதிப் போக்குவரத்துத் தடை
குறித்த பகுதியில் விசமிகளால் சம்புப் புற்தரவைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் அது பாரிய தீயாகப் பரவியதில் ஏற்பட்ட புகையால் வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர்கள் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
வரட்சியான காலத்தில் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் தீப் பரவல் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan