கொழும்பில் பெண் சட்டத்தரணியொருவரின் மோசமான செயல் - சிசிடிவியில் பதிவான காட்சி
கொழும்பு - இரத்மலானையில் உள்ள பல்பொருள் அங்காடியிலிருந்து பல பொருட்களை திருடி கைப்பையில் மறைத்துவைத்த சம்பவம் தொடர்பில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இரத்மலானையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியிலிருந்து ஆட்டு இறைச்சி, கோழி மற்றும் முந்திரி உள்ளிட்ட பல பொருட்களைத் திருடியபோது நேற்று இரவு (18) கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள்
திருடப்பட்ட பொருட்களில் 520 கிராம் கோழி இறைச்சி, 250 கிராம் ஆட்டு இறைச்சி , வறுத்த முந்திரி, ஒரு பல் துலக்கும் தூரிகை மற்றும் ரூ. 5290 மதிப்புள்ள மதிய உணவுத்தாள் பொட்டலம் ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.

இவை அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரகசியமாக பொருட்களை தனது கைப்பையில் போடுவது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக, நேற்று இரவு (18) கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபரிடம் உள்ள வழக்கறிஞரின் அடையாள அட்டையில் பன்னிப்பிட்டிய பகுதி முகவரி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் இரத்மலான பகுதியை சேர்ந்த 47 வயது பெண் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.