தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்! கஜேந்திர குமார் எம்.பி

Jaffna Gajendrakumar Ponnambalam Nothern Province Ministry of justice Sri lanka chemmani mass graves jaffna
By Theepan Jun 19, 2026 10:39 AM GMT
Report

தமிழினப் படுகொலையின் சாட்சியாக காணப்படுகின்ற செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் விவகாரங்களுக்கு  சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே நீதி  நிலைநாட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று(18.06.2026) யாழ் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

நூற்றுக்கும்  மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள்  

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக ஒரே தடவையில் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையை இந்த அரசாங்கம் இனப் படுகொலையாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்! கஜேந்திர குமார் எம்.பி | International Investigation Need Chemmani Gajendra

தற்போது செம்மணி மனிதப் புதைகுழியில் 380க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தமிழின படுகொலையின் சாட்சியாக செம்மணி விளங்குகிறது.

குறித்த மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்த போது சிலர் அதனை ஏளனமாக பேசிய வரலாறுகள் இருக்கின்ற நிலையில் நாம் அதனை தொடர்ந்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியதன் விளைவாக இன்று உலக அளவில் பேசப்படும் மனிதப் புதைகுழியாக காணப்படுகிறது.

பொதுவெளியில் வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பொதுவெளியில் வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சர்வதேச ரீதியிலான நீதி

இந்த அரசாங்கமும் வேறு வழி இன்றி அதனை அகழ்ந்து வரும் நிலையில், தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை நிறுத்தாமல் உண்மையை  உள்ளபடி வெளிப்படுத்துவார்களா என்ற சந்தேகம் இருக்கிறது.

தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்! கஜேந்திர குமார் எம்.பி | International Investigation Need Chemmani Gajendra

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்களுக்கு நீதி கிடைக்காது என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ள நிலையில்,  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

ஆகவே தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் கொத்தாக கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் செம்மணி படுகொலைகளுக்கும் சர்வதேச நீதியே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என  குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற யாழ். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

கடற்றொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற யாழ். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US