நேர்த்திக்கடன் செலுத்த சென்ற தாய்க்கு நேர்ந்த கதி - நேரில் பார்த்த 16 வயது மகள் கொடுத்த வாக்குமூலம்

Anuradhapura Sri Lankan Peoples Accident
By Dhushi Sep 18, 2026 07:51 PM GMT
Report

அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரண்டு இரண்டு பெண் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளதுடன், 16 வயது மகளிடம் இருந்து வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரு அதிகாரிகளும் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளனர்.

இறப்புக்கான காரணம்

இவர்களின் இறப்பிற்கு விபத்தின் பொழுது ஏற்பட்ட பலத்த காயங்களே காரணம் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுத்துறை - தோட்டமுன மரண விசாரணை அதிகாரி நிரோஷா நிலுக்ஷினி முன்னெடுத்துள்ளதுடன், களுத்துறை நாகோடா போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்த்திக்கடன் செலுத்த சென்ற தாய்க்கு நேர்ந்த கதி - நேரில் பார்த்த 16 வயது மகள் கொடுத்த வாக்குமூலம் | Train Accident In Anuradhapura

அத்துடன், சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி கே.எம்.டி.பி. குணதிலகா சமர்ப்பித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டது.

மாதுகம - மகா களுபஹானவைச் சேர்ந்த 58 வயதான விதான கமகே ரேணுகா தமயந்தி மற்றும் அகலவத்தை - உடவெலவைச் சேர்ந்த 53 வயதான தேவனி குருகே ஸ்ரீயானி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருவரும் செருப்பிட்ட சிவில் பாதுகாப்புப் படை முகாமில் பணியாற்றிய அதிகாரிகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

16 வயது மகள் பார்த்த சம்பவம்

சம்பவம் நடந்த தினத்தில், ஸ்ரீயானியின் 16 வயது மகள் சித்துமினி ஜெயநெத்தி, அதிகாலையில் தனது தாயார் மற்றும் தோழியுடன் அனுராதபுரம் செல்வதற்காக பேருந்தில் களுத்துறைக்கு வந்ததாக கூறியுள்ளார்.

நேர்த்திக்கடன் செலுத்த சென்ற தாய்க்கு நேர்ந்த கதி - நேரில் பார்த்த 16 வயது மகள் கொடுத்த வாக்குமூலம் | Train Accident In Anuradhapura

அதன் பின்னர் அவர் மைதானத்தின் பக்கத்திலிருந்து தொடருந்து தண்டவாளத்தில் நுழைந்து தொடருந்து நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​எதிர்பாராதவிதமாக ஒரு தொடருந்து வந்தது. தொடருந்து வருவதைக் கண்டவுடன், தான் சுமந்து வந்த இரண்டு பைகளையும் தொடருந்து மேடையில், வீசிவிட்டு உடனடியாக மேடையில் இருந்து மேலே ஏறுவதற்கு முயற்சித்துள்ளனர்.

மேலும், தனது தாயாரையும் மற்ற பெண்ணையும் தூக்க முயன்றதாகவும், ஆனால் அதற்குப் போதுமான நேரம் இல்லாத காரணத்தினால், அப்போது, ​​அவர்கள் இருவரும் தொடருந்து மேடையை பிடிக்க முயன்றபோது, ​​திடீரென வந்த தொடருந்து மோதி தூக்கி வீசப்பட்டதாக மகள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பயணத்தில் கலந்துக் கொள்ளாத கணவர்

இவர்களின் பிரேதப் பரிசோதனையின்போது சாட்சியமளித்த, உயிரிழந்த ஸ்ரீயானியின் கணவர் செனரத் ஜெயநெத்தி, “தனக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததால் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளவில்லை” என்றார்.

இதனைத் தொடர்ந்து, ரேணுகா தமயந்தியின் மகளான லக்ஷிகா மதுஷானி, தனது தாய் அதிகாலையில் அனுராதபுரம் செல்வதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டதாகவும், அவரை மத்துகம பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட பின்னரே இவ்வாறு விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.     

எதிர்ப்புகளை மீறி கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவக் கழிவுகள் - நிர்வாகத்திற்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

எதிர்ப்புகளை மீறி கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவக் கழிவுகள் - நிர்வாகத்திற்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்

வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US