பதாகைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர்கள்..! கிழித்து எடுத்து சென்ற அர்ச்சுனா எம்பி
புதிய இணைப்பு
அர்ச்சுனா எம்பியின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு , பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அர்ச்சுனா இராமநாதன் பதாகையை கிழித்து, தனது காரில் எடுத்து சென்றுள்ளார்.

முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
செருப்பு மாலை
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல் , கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், நேற்றைய தினம்(18) இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில், அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படங்கள் இணையத்தில் பரவலாகி வருகின்றன.

பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri