வெளிநாடுகளில் பதுங்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் - குற்றவாளிகளை இலக்கு வைக்கும் அரசாங்கம்
வெளிநாடுகளில் நீதிமன்றப் பிடியாணையுடன் பதுங்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களை இலங்கைக்கு மீளக் கொண்டுவர அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு அறிவிப்பு
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக மற்றும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஒவ்வொரு பிடியாணைக்கும் பொலிஸ் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.
பல முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளிலும் அதே சட்ட நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

அவர்கள் இந்த நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும். அதற்காக, எதிர்காலத்தில் நாங்கள் நீல அறிவிப்புகள் அல்லது சிவப்பு அறிவிப்புகளைப் பிறப்பித்து அவர்களை இலங்கைக்குக் கொண்டு வருவோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களம் நீதிமன்ற உத்தரவுகளை சட்டத்திற்கு இணங்க செயல்படுத்தி வருவதாகவும், சந்தேக நபர்களைத் திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய தேவைப்படும் இடங்களில் மேலும் சர்வதேச ஒத்துழைப்பு நாடப்படும் என்றும் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri