தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பில் திடீர் தீ விபத்து
ஹோல்ரீம் தோட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீயினால் 10 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
அத்துடன் அந்த வீடுகளில் குடியிருந்து சிறுவர்கள் பெரியவர்கள் பெண்கள் உட்பட சுமார் 35 பேர் நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்ரீம் தோட்டத்தில் நேற்று(28.2.2026) மாலை 10 வீடுகளை கொண்ட தொழிலாளர் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீகாரணமாக முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
தீ விபத்து
குறித்த தீ விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் சேதங்களோ காயங்களோ ஏற்படாத போதிலும் தொழிலாளர்கள் அத்தியவசிய ஆவனங்கள் உடுதுனிகள் தளபாடங்கள் சமயலறை உபகரணங்கள் தங்க நகைகள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் சிறுவர்கள் பெண்கள், ஆண்கள் என சுமார் 35 பேர் ஹோல்ரீம் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான சமைத்த உணவினை வழங்குவதற் தேவையான நடவடிக்கையினை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
சேத விபரங்கள்
இதே நேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அத்திவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க அக்கரபத்தனை பிரதேச சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவி ரதிதேவி தெரிவித்தார்.

இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்படாத போதிலும் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாகவும் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri