கடற்றொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது பற்றித் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற தொழிலாளி படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியுள்ளது.
அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளி தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி கடற்றொழிலாளர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடாத்தி சடலத்தை கண்டுபிடித்து இன்று காலை 10 மணியளவில் கரை சேர்ந்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam