ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் கொடுத்த இறுதி வாய்ப்பு - ஊடகங்கள் முன் ட்ரம்ப் கொடுத்த பதில்
ஹோர்முஸ் நீரிணையை ஒரு வாரத்திற்குள் மீண்டும் திறப்பதாகக் கூறி ஈரான் முன்வைத்த வீதி வரைபடத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
கட்டார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஈரானால் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த 7 நாட்கள் அடங்கிய திட்ட முன்மொழிவை ஏற்க மறுப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து டென்னசி நோக்கிப் புறப்படுவதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்
ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்குதல், ஈரான் எண்ணெய் விற்பனை மீதான தடைகளைத் தளர்த்துதல், முடக்கப்பட்ட 12 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவித்தல் மற்றும் பிராந்திய ரீதியிலான போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துதல் போன்ற நிபந்தனைகள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால், உலகின் மிக முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது.
அமெரிக்க தரப்புடன் இனி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தமக்கு நம்பிக்கை இல்லை என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ள அதேவேளை, அச்சுறுத்தல்களுக்கோ அல்லது அழுத்தங்களுக்கோ ஈரான் ஒருபோதும் பணியாது என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழத்தை அங்கீகரிக்கத் தயாராக இருந்த நாடு! முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளியிட்டிருக்கும் கருத்து..
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri