மட்டக்களப்பு விவசாயிகளுக்கான உரத் தட்டுபாடு : ஜனாதிபதியை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Kumar May 12, 2026 01:03 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாகப் பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

இன்று(12.05.2026) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய ஊடக சந்திப்பு இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து காதலினால் ஏற்பட்ட விபரீதம் - தாயிற்கும் மகளுக்கும் நேர்ந்த கதி

பேருந்து காதலினால் ஏற்பட்ட விபரீதம் - தாயிற்கும் மகளுக்கும் நேர்ந்த கதி

விவசாயிகளின் கோரிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை ஜனாதிபதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் இணைந்து நாங்களும் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும்.

தனியார் நிறுவனங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்வதற்கு அரசாங்கம் பணத்தினை வழங்கியுள்ளபோதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை வழங்குவதற்கு இழுத்தடிப்புகளை செய்து வருகிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோகம் விதைக்கப்பட்டு, 50 நாட்களைக் கடந்த நிலையில் உள்ளது. 50 நாட்கள் கடந்தும் சில கமலநல சேவைகள் நிலையத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் பசளை விநியோகம் நடைபெறாமல் உள்ளது மிக வருத்தத்தினைத் தருகின்றது.

உரம் விநியோகம் தடை

வாகரை மற்றும் ஏறாவூர் கமலநல சேவைகள் நிலையத்துக்கு தனியார் கம்பெனி மூலம் உர விநியோகம் நடைபெற வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்து அவர்களுக்குரிய பணமும் கமலநல சேவைகள் நிலையத்தினால் கடந்த மாதம் (ஏப்ரல்) வைப்பிலிடப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது.

இன்று வரை ஒவ்வொரு நாளும் நாங்களும் கமலநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தேசிய உர செயலகம் ஆகியவற்றுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு நாளும் நாளை வரும் நாளை வரும் என்று விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றார்கள். அதாவது அந்த நிறுவனம் வந்து எங்கள் அதிகாரிகளைக் கூட ஏமாற்றுகின்றது.

மட்டக்களப்பு விவசாயிகளுக்கான உரத் தட்டுபாடு : ஜனாதிபதியை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை | Fertilizer Shortage For Batticaloa Farmers

நேற்று தனியார் நிறுவனத்துக்கு மூன்று லொறிகள் அனுப்பப்பட்டது. மூன்று லொறிகளில் ஒரு லொறியில் உரம் ஏற்றப்பட்டும், பிற்பகல் அந்த லொறியை தடுத்து அந்த லொறியின் சாவியை அந்த உரம் விநியோகம் செய்யும் கம்பெனி பறித்து உரம் வருவதனைத் தடை செய்துள்ளார்கள்.

அதன் பிற்பாடு எங்களுக்குத் தகவல் கிடைக்கப்பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய உர செயலகம், பிரதியாணையாளர் கமலநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு, அதன் பிற்பாடு ஒரு லொறி மாத்திரம் இரவு விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு விவசாயிகளுக்கான உரத் தட்டுபாடு : ஜனாதிபதியை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை | Fertilizer Shortage For Batticaloa Farmers  

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்

தென்னிலங்கையில் நள்ளிரவில் இடம்பெற்ற கொடூரம்! உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு நபர் கொலை

தென்னிலங்கையில் நள்ளிரவில் இடம்பெற்ற கொடூரம்! உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு நபர் கொலை


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US