இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன கையூட்டல் ஓழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எர்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் அந்த ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைக்கு அமைவாக அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
நிலையில் வாக்குமூலம் வழங்கியமையை தொடர்ந்து அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் இன்று காலை (12) முன்னிலையாகியுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமான கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணைக்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம்
வாக்குமூலம் அளிக்க அழைப்பாணை
இதற்கமைய, இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமான கொள்வனவு ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பாக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார்.
அவர் 60 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் மே 12, 2026 இன்று வாக்குமூலம் அளிக்க அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam