கடை தீப்பற்றியதில் காயங்களுக்குள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை 99ம் கட்டை சந்தியில் பெற்றோல் கடை ஒன்று கடந்த 09.12.2021 அன்று மதியம் தீப்பற்றியதில் பலத்த எரி காயங்களுக்கு உள்ளான கடை உரிமையாளர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் இன்று (21) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த பெற்றோல் கடையின் உள் பகுதியில் சோளக் கதிரை தீமூற்றி அடுப்பில் வைத்திருந்த நிலையில் பெற்றோல் தீப்பிடித்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவந்துள்ளது.
இரு பிள்ளைகளின் தாயான எச்.எம்.சம்சுநிசா வயது(45) என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஜனாசா வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பெற்றோல் விற்பனை செய்யும் கடை தீப்பற்றியதில் முற்றாக சேதம்: விற்பனையாளர் பலத்த காயம்