மலையகத்தில் வீடு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
பொகவந்தலாவ டியன்சின் தோட்டப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது இன்று (29) காலை இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் தனது வீட்டில் நேற்று இரவு உறங்கி கொண்டிருந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டதாகவும் அவரின் மூக்கு பகுதியில் இரத்தகறை காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொகவந்தலாவ பொலிஸார் குறித்த மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளாரா என பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ டியன்சின் தோட்டப்பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜ் என்பவராவர்.
மேலதிக விசாரணை
இதேவேளை மரண விசாரணைகள் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். ராமமூர்த்தி தலைமையில் இடம் பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
