தந்தையும் மகளும் விபரீத முடிவு: திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை- கந்தளாய் பகுதியில் தபால் தொடருந்தில் பாய்ந்து தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்றையதினம் (06.09.2023) திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்திலே ஏற்பட்டுள்ளது.
தந்தையும் மகளும் நீண்ட நேரமாக தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், தொடருந்து வந்ததும் தந்தையும் மகளும் தொடருந்து முன்பாக குதித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 38 வயதுடைய தந்தையும் ஆறு வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
