விவசாயிகளை வைத்து அரசியல் செய்யும் அமைச்சர்கள்.. பத்தரமுல்ல சீலரத்ன தேரர் விடுத்துள்ள சவால்

Sri Lanka Politician Battaramulle Seelarathana Thero
By Rakesh Jul 04, 2026 12:21 AM GMT
Report

தற்போதைய அரசின் அமைச்சர்களை, எவ்வித பாதுகாப்பும் இன்றி விவசாய மக்களிடம் அனுப்பினால் அவர்கள் மீதான மக்களின் உண்மையான மனநிலையையும், விவசாயிகளின் அதிருப்தியையும் நேரடியாக அறிந்துகொள்ள முடியும் என்று ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

ஜனசேத பெரமுன கட்சியின் தலைமைப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் தேர்தலுக்கு முன்னர் விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்தி வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

விவசாய மக்களின் துயரங்களைத் தங்களுடைய துயரங்களாகக் காட்டி அரசியல் செய்த அவர்கள், இன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் அதே விவசாய மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நாட்டின் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். ஒரு கிலோ நெல்லை விற்றுப் பெற்ற பணத்தில் ஒரு சவர்க்காரத் துண்டைக் கூட வாங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. சந்தையில் ஒரு சவர்க்காரத் துண்டின் விலை சுமார் 200 ரூபாவாக உள்ளது. ஆனால், விவசாயிகளின் உற்பத்திகளுக்கு அதற்கு நிகரான நியாயமான விலை கிடைப்பதில்லை.

சுரேஷ் சலேவின் மடிக்கணினியில் மறைந்துள்ள இரகசியங்கள் - தூக்கத்தை இழந்த இரவுகள்!

சுரேஷ் சலேவின் மடிக்கணினியில் மறைந்துள்ள இரகசியங்கள் - தூக்கத்தை இழந்த இரவுகள்!

மக்களின் நிலை.. 

இத்தகைய நிலையில் விவசாயக் குடும்பங்கள் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியும்? ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு 650 கிராம் அரிசி போதுமானது என்ற வகையில் அரச தரப்பால் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

விவசாயிகளை வைத்து அரசியல் செய்யும் அமைச்சர்கள்.. பத்தரமுல்ல சீலரத்ன தேரர் விடுத்துள்ள சவால் | Farmers Issue Ministers Seelarathna Thero

மூன்று அல்லது நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் 650 கிராம் அரிசியை மட்டும் கொண்டு எவ்வாறு உயிர் வாழ முடியும்? இந்தக் கருத்துக்கள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்பதுடன் முற்றிலும் முரணானவை ஆகும்.

இத்தகைய கருத்துக்களைக் கூறும் அமைச்சர்கள், தங்களது வீடுகளில் அந்த அளவு அரிசியைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியுமா என்பதை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அமைச்சர்களான வசந்த சமரசிங்க, கே.டி. லால் காந்த மற்றும் நாமல் கருணாரத்ன உள்ளிட்டோர் விவசாய மக்களின் கடுமையான எதிர்ப்பை தற்போது நாடு முழுவதும் எதிர்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை முறையாகப் பொதியிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்துத் திறன்களும் நமக்குள்ளன. இருப்பினும் அதற்கான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மாறாக, வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கே தற்போதைய அரசு முன்னுரிமை வழங்கி வருகின்றது.

இதன் பின்னணியில் இலாப நோக்குடைய அரசியல் சூழ்ச்சி இருப்பதாக மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது. தேர்தலுக்கு முன்னர் தங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் தேவையில்லை, பொதுமக்களே தங்களது பாதுகாப்பு என்று மேடைகளில் முழங்கிய அமைச்சர்கள், இன்று பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்குள் சொகுசாகச் செயற்படுகின்றனர்.

ஜனாதிபதி இந்த அமைச்சர்களைப் பாதுகாப்பின்றி நேரடியாக விவசாய மக்களிடம் அனுப்பிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான அதிருப்தியின் அளவை அவர்கள் தெளிவாக உணர்ந்துகொள்வார்கள்." என்றார்.

இலங்கை கடற்படை புதிய ஊடக பணிப்பாளர் நியமனம்

இலங்கை கடற்படை புதிய ஊடக பணிப்பாளர் நியமனம்

நைஜீரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நிறைவு: மீளப்பெறப்பட்ட அமெரிக்க படைகள்

நைஜீரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நிறைவு: மீளப்பெறப்பட்ட அமெரிக்க படைகள்

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US