டுபாயில் "வெள்ளே சாரங்க" கைது: போதைப்பொருட்களும் பறிமுதல்!
முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் ஓருவராக கருதப்படும் வெள்ளே சாரங்க என்ற நபர் டுபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'வெள்ளே சாரங்க' என அழைக்கப்படும் சாரங்க பிரதீப் என்பவர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
'லலித் கன்னங்கர' எனப்படும் 'பஸ் லலித்' என்பவரைக் கைது செய்வதற்காகச் சென்ற மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், டுபாய் பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 'கொக்கெய்ன்' மற்றும் 'ஐஸ்' ஆகிய போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், குறித்த சந்தேகநபரின் கைது தொடர்பாக இதுவரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதுடன் பொலிஸாரும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகக்ள வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய நாட்களாக வெளிநாடுகளில் பதுங்கியிருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.