இயக்கச்சி றீச்சாவின் படைப்புக்களை கண்டு வியந்த பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது

Jaffna Sri Lanka Reecha Baskaran Kandiah Social Media
By Kowshi Aug 29, 2026 08:34 AM GMT
Report

1985ம் ஆண்டு, நெதர்லாந்தில் ஒலிபரப்புத்துறை பயிற்சிக்காக சென்றிருந்த போது நான் பார்த்த உலகப்புகழ் பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதை றீச்சாவில் கண்டு வியந்ததாக பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தரிசு நிலமாய்க் கிடந்த நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும் எண்ணி வியந்தேன் எனவும் அவர்  புகழுரைத்துள்ளார். 

40 ஆண்டுகள் ஆசை நிறைவேறல் 

அவர் மேலும் தெரிவிக்கையில், உலகச்சின்னங்களைக் காண ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம்செய்ய இயலாதவர்கள் அவற்றின் மாதிரிகளை ஒரே இடத்தில் கண்டு குதூகலிக்க ஒரு வாய்ப்பளிக்கும் இதுபோன்ற ஒரு அமைப்பினை இலங்கையிலும் உருவாக்க மாட்டார்களா! என்ற எனது ஆசை 40 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது.

இயக்கச்சி றீச்சாவின் படைப்புக்களை கண்டு வியந்த பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது | An Interesting Post By A Person About Reecha

நேற்று யாழ். மண்ணிலிருந்து திரும்பும் வழியில், என்மீது பேரன்பு வைத்துள்ள சகோதரர், கரனின் (தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா) அன்பு அழைப்பினை ஏற்று, இயக்கச்சியில், அவர் உருவாக்கியுள்ள புதிய பூமியாம் “ReeCha” இயற்கை வேளாண் பூங்காவிற்குப் போயிருந்தேன்.

தரிசு நிலமாய்க் கிடந்த ஒரு நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும், தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பற்றையும் எண்ணி வியந்தேன்.

றீச்சாவின் தோற்றம்

வெறுமனே ஒரு கேளிக்கைப் பூங்காவாக மட்டும் அன்றி, உலக அதிசயச் சின்னங்களைப் பற்றிய அறிவினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு பொது அறிவுத் தளமாகவும், வீட்டுத் தோட்ட முயற்சிகளில் ஆர்வமுள்ளோருக்கு வேளாண்துறை பற்றிய அறிவை ஊட்டும் ஒரு திறந்த பல்கலைக் கழகமாகவும் அந்த இடம் காட்சியளித்தது.

அத்துடன் தேச எல்லைகளை கடந்து வருவோருக்கு இந்த மண்ணின் வாழ்வியலை அறிமுகப்படுத்தும் ஒரு பண்பாட்டு மையமாகவும், 5 நட்சத்திர விடுதிகளில் தனித்தனி அறைகளில் அடைபட்டு கிடக்காமல் இயற்கை எழில் நிறைந்த பூமியில் சுத்தமான காற்றைச் சுவாசித்துக் கொண்டு தங்கியிருக்கக் கூடிய இல்லங்களைக் கொண்ட சுற்றுலாத் தலமாகவும் அந்த இடம்மாற்றப்பட்டிருந்தது.

இயக்கச்சி றீச்சாவின் படைப்புக்களை கண்டு வியந்த பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது | An Interesting Post By A Person About Reecha

மேலும் குடும்பத்தோடு வந்து குதூகலிக்கக் கூடிய கேளிக்கை அம்சங்கள் பல நிறைந்த பொழுது போக்குப் பூங்காவாகவும் ‘ReeCha’ Organic Agricultural Theme Park திகழ்வதை, சில நிமிடத்துளிகள் அங்கு சுற்றி வந்ததில் அனுபவித்து அறிந்தேன்.

வெகு விரைவில் யாழ். மண்ணின் தனித்துவ அடையாளச் சின்னங்களில் ஒன்றாய் ReeCha மாறவேண்டுமென வாழ்த்தி விடைபெற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery

இலங்கையில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம்! செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் ஏற்படவுள்ள தாக்கம்

இலங்கையில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம்! செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் ஏற்படவுள்ள தாக்கம்

நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப பில்லியன் டொலர்கள் தேவை..!

நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப பில்லியன் டொலர்கள் தேவை..!

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US