முக்கிய புள்ளிகளை வைப்பதற்காக வெலிக்கடை சிறையில் சிறப்புப் பிரிவு! அமைச்சரின் அறிவிப்பு
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், பாதாள உலகத் தலைவர்களையும் தடுத்து வைப்பதற்காக வெலிக்கடை சிறையில் ஒரு சிறப்புப் பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பையும் பாதாள உலக நடவடிக்கைகளையும் ஒழிப்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிறப்புச் சிறை வசதிகள்
'ஐஸ்' போன்ற போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளைக் குறிவைப்பதற்காக இந்த சிறப்புச் சிறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள் தற்போது கணிசமான அளவிற்கு ஒடுக்கப்பட்டுள்ளன.
எவ்வித அரசியல் செல்வாக்குமின்றி அனைவருக்கும் சமமாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.