பெரும் கைதுகளுக்கான கோப்புகள் தயார்! அதிரடியாக களமிறங்கும் புலனாய்வு அதிகாரிகள்
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்பலப்படுத்துவோம் என்பதே.
அந்தவகையில், தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்களில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்தி பலரை கைது செய்து வருவதில் அதிரடியாக செயற்பட்டு வருகின்றது.
குறிப்பாக, ராஜபக்சக்களின் பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்களை புலனாய்வு அதிகாரிகள் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில், விரைவில் பல முக்கிய அரசியல் புள்ளிகளை கைது செய்வதற்கான பட்டியல்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
தாய் - மனைவி - சகோதரியின் புகைப்படங்களுக்கே பாதுகாப்பில்லை! இலங்கையில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை