தாய் - மனைவி - சகோதரியின் புகைப்படங்களுக்கே பாதுகாப்பில்லை! இலங்கையில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை
பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை கொண்டு வியாபாரம் செய்யும் வகையில் நடத்தப்பட்ட முகப்புத்தக குழு தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
குறித்த முகப்புத்தக குழுவில் ஆயிரக்கணக்கான நபர்கள் இணைந்திருப்பமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அக்குழுவில் உள்ள நபர்கள், தனது தாய், மனைவி, சகோதரி, குழந்தை என பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை விற்பனை செய்துள்ளனர்.
மிக மிலேச்சத்தனமான இந்த செயற்பாடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டு பின்னர், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இவ்வாறு புகைப்படங்களை கொண்டு முகப்புத்தக குழு ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகம் சுளிக்க வைக்கும் இச்செயல் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,