பதுளையில் விவசாயி ஒருவர் கொடூரமாக படுகொலை
பதுளையில் விவசாயி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பயங்கர சம்பவம் பதுளை மாவட்டம், ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிடபொல பகுதியில் நேற்றுமுன் தினம் (08.02.2026) இடம்பெற்றுள்ளது.
விசாரணை
தாக்குதலுக்கு உள்ளான நபர் பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் பிடபொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணமும் சந்தேகநபர்களின் அடையாளமும் இன்னும் வெளியாகவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam