அதிரடி மாற்றங்களுடன் வெளியானது BCCIயின் புதிய ஒப்பந்தப் பட்டியல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, ஓக்டோபர் 1, 2025 முதல் செப்டம்பர் 30, 2026 வரையிலான காலப்பகுதிக்கு புதிய மத்திய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
குறித்த மத்திய ஒப்பந்தப் பட்டியலில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி கடந்த ஆண்டில் இருந்த 'A+' பிரிவு இந்த முறை நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு வடிவத்தில் மாத்திரம் விளையாடுவதால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 'B' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒப்பந்தப் பட்டியலிலிருந்து நீக்கம்
மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் அணித்தலைவராக பொறுப்பேற்ற சுப்மன் கில், மிக உயர்ந்த 'A' பிரிவுக்கு முன்னேறியுள்ளார். இதற்கமைய A பிரிவில் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

B பிரிவில் வோஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், மொஹமட் சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும், C பிரிவி அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் மொத்த வீரர்களின் எண்ணிக்கை 34இலிருந்து 30ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் மொஹமட் ஷமி, சர்பராஸ் கான், ரஜத் படிதார் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு சபை ஒவ்வொரு பிரிவிற்கும் வழங்கப்படும் ஊதிய விபரங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த மாற்றங்கள் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை மாற்றத்தை வெளிப்படுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.