இலங்கையின் அதிகார பூர்வ நிதி இருப்பில் சரிவு
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட தரவுகளின்படி, இலங்கையின் அதிகார பூர்வ இருப்பு சொத்துக்கள் ஜனவரி 2026 இல் 0.2வீதம என்ற சிறிய சரிவைப் பதிவு செய்துள்ளன.
டிசம்பர் 2025 இறுதியில் 6,838 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அதிகார பூர்வ இருப்பு சொத்துக்களின் மதிப்பு, ஜனவரி 2026 இறுதிக்குள் 6,824 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்றுக் குறைந்துள்ளது.
அந்நிய செலாவணி இருப்பு
அதிகார பூர்வ கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான அந்நிய செலாவணி இருப்பு, இந்த மாதத்தில் 1வீதம் குறைந்து, 6,747 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 6,680 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய வங்கியின் தங்க இருப்புக்கள் ஜனவரி 2026 இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவுசெய்து, 26.8வீதம் அதிகரித்து USD 86 மில்லியனில் இருந்து USD 109 மில்லியனாக உயர்ந்துள்ளது.
சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள அந்நியச் செலாவணி பரிமாற்ற வருமானம், அதிகார பூர்வ இருப்பு சொத்துக்களில் அடங்கும் என்றும் அவை பயன்பாட்டிற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri