கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் : குடும்பஸ்தர் மரணம்
அம்பாந்தோட்டை, ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் செலுத்துநர் சிகிச்சை பலனின்றிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ரன்ன, கொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, ரன்ன - வீரகெட்டிய பிரதான வீதியூடாக நேற்று ரன்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், நூலக வீதிக்குத் திரும்பும் சந்தியருகே சென்றபோது எதிர்பாராதவிதமாகச் செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதி நடுவே கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர், உடனடியாக மீட்கப்பட்டு ரன்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் மேலதிக அவசர சிகிச்சைக்காகத் தங்காலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்ச மீதான விசாரணை தீவிரப்படுத்த வேண்டும்..! ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam