உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் டர்ம்ப்..! விகாரைகளே ஆரம்ப இலக்கு

Poson poya day Donald Trump Gotabaya Rajapaksa United States of America Easter Attack Sri Lanka
By Aanadhi Jun 23, 2026 02:47 PM GMT
Report

பௌத்த விகாரைகளை இலக்கு வைத்தே ஆரம்பத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட இருந்ததாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும் முக்கிய சந்தேக நபரொருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக விளக்கமறியலில் இருந்த சந்தேக நபரான முகமது ஃபசால் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடனான ஒரு விசேட கலந்துரையாடலில், தாக்குதல் குறித்து வெளிப்படுத்தப்படாத பல சர்ச்சைக்குரிய தகவல்களை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஞானசார தேரர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

அமெரிக்காவின் சதித்திட்டம்

முகமது ஃபசாலின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல் இந்தியாவில் உள்ள 'சுயுறு' அமைப்பால் நடத்தப்படவில்லை மாறாக இது முற்றிலும் ஒரு அமெரிக்கத் திட்டமாகும்.

தாக்குதலின் மூளையாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமைத் தொடர்புகொள்வதற்காக, அமெரிக்க அதிகாரிகள் 'அபுஹிந்த்' என்ற பெயரில் ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.

ஃபசாலின் கூற்றுப்படி, இந்த அபுஹிந்த் முதலில் சஹ்ரானின் தம்பி மூலம் அவரைத் தொடர்புகொண்டு, பின்னர் தாக்குதலை நடத்துமாறு சஹ்ரானைத் தூண்டியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது அவர் வெளியிட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், சஹ்ரானும் அவரது குழுவும் முதலில் கிறிஸ்தவ தேவாலயங்களைத் தாக்கத் திட்டமிடவில்லை என்பதுதான்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் டர்ம்ப்..! விகாரைகளே ஆரம்ப இலக்கு | America Behind Easter Attack Initial Target

பொசன் அல்லது மற்றொரு பௌர்ணமி நாளில் நடைபெறும் பௌத்த பெரஹர ஊர்வலமொன்றைத் தாக்குவதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது என்று அவர் கூறுகியுள்ளார்.

பௌத்த மக்களைக் குறிவைத்து தாக்குதுல் மேற்கொண்டு, நாட்டில் பெரும் அமைதியின்மையை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது என ஃபசால் மேலும் குறிப்பிடுகிறார்.

2019 ஏப்ரல் 14 அன்று புத்தாண்டு தின கொண்டாட்டங்களின் போதும் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதுவரை வெடிபொருட்கள் சரியாக உலராததால் அந்தத் திட்டம் மாற்றப்பட்டதாக அவர் வெளிப்படுத்துகிறார்.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு

வெடிபொருட்களை விரைவாக உலர்த்துவதற்காக சஹ்ரானின் குழு ஒரு சலவை இயந்திரத்தைக்கூட வாங்கியிருந்தது.

மேலும் தாக்குதலுக்கு முன்பு குண்டுகளை ஏற்றிச் சென்ற லொரியிலும் அந்த சலவை இயந்திரம் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்து, பாதுகாப்பு தொடர்பாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு தலைவரை ஆட்சிக்குக் கொண்டு வருவதே இந்தத் தாக்குதலின் இறுதி நோக்கம் என்றும் ஃபசால் சுட்டிக்காட்டுகிறார்.

கோட்டாபய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கான பின்னணி இந்தத் தாக்குதலின் மூலமே உருவாக்கப்பட்டது என்ற பிரச்சினையையும், அவரது அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்கும் ஆவணங்கள் தொடர்பான சிக்கலான சூழ்நிலையையும் இந்தப் பின்னணியிலேயே நோக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் டர்ம்ப்..! விகாரைகளே ஆரம்ப இலக்கு | America Behind Easter Attack Initial Target

இந்தத் தாக்குதல் தொடர்பாக தற்போது உயர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ள 24 முக்கிய சந்தேக நபர்களில் பெரும்பாலானோர் நிரபராதிகள் என்று தாம் நம்புவதாகவும், அவர்களுடைய சட்டத்தரணிகளுக்கான கட்டணங்கள் மற்றும் குடும்பங்களின் பராமரிப்புச் செலவுகளைத் தனிப்பட்ட முறையில் தாம் செலவிடுவதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்காக ஏற்கனவே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காகத் தாம் குரல் கொடுப்பதாகவும், உண்மையான சதிகாரர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் கூறும் ஃபசால், இந்த விடயங்கள் தொடர்பான ஆதாரங்களுடன் தனது தரப்பு நியாயங்களை எங்கு வேண்டுமானாலும் முன்வைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மீது கடும் அதிருப்தியில் இந்தியா

இலங்கை அரசாங்கம் மீது கடும் அதிருப்தியில் இந்தியா

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து..! அபாய மண்டலங்களின் பட்டியல் வெளியீடு

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து..! அபாய மண்டலங்களின் பட்டியல் வெளியீடு

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 23 June, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US