யாரும் அறியாத செம்மணி பயங்கரம் : உயிருடன் புதைக்கப்பட்ட இளம் தம்பதிகள்
இலங்கை வரலாற்றின் மிகக் கொடூரமான பக்கங்களில் ஒன்றான செம்மணி பகுதியில் நாளுக்கு நாள் அகழ்வுப் பணிகளும் அதனோடு பல எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது உயிருடன் புதைக்கப்பட்ட இரு இளம் தம்பதிகளின் எலும்புக்கூடுகளை தான் அடையாளம் கண்டதாக கனடாவில் இருக்கும் அருட்தந்தை பேர்னார்ட் அல்போன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களினுடைய முறைப்பாட்டின் அடிப்படையில் செம்மணி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வாகனங்களினுடைய மற்றும் பெரிய வேலைகள் இடம்பெறுவதை போல நாளாந்தம் சத்தம் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அன்று செம்மணியில் நடந்தது என்ன? அந்த இளம் தம்பதிகள் உயிருடன் புதைக்கப்பட்டது ஏன்? காலம் கடந்து இன்று அடுக்கப்படும் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் என்ன சொல்கின்றன? என்பது பற்றி விரிவாக ஆராய்கின்றது கீழ்வரும் காணொளி...........
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri